ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப். மாதத்திற்கான விருதை வென்றனர் கமிந்து மெண்டிஸ், டாமி பியூமண்ட்!

Updated: Tue, Oct 15 2024 08:55 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது. 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியவின் வீரர் டிராவிஸ் ஹெட், இலங்கை வீரர்கள் கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெய சூரியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனது. 

இதில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்து அடுத்தடுத்து சதங்களை விளாசித் தள்ளிய கமிந்து மெண்டிஸ், செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்று சாதித்துள்ளார். அந்தவகையில் செப்டம்பர் மாதத்தில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கமிந்து மெண்டிஸ், 90.20 என்ற சராசரியில் 451 ரன்களை குவித்தார். மேற்கொண்டு வெறும் 8 டெஸ்டில், 13 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை கடந்த டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார். இந்தாண்டு கமிந்து மெண்டிஸ் வெல்லும் இரண்டாவது விருது இதுவாகும். 

இந்நிலையில் ஐசிசி மாதாந்திர விருதை அடுத்தடுத்து இரண்டு மாதங்கள் கைப்பற்றிய இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் கமிந்து மெண்டிஸ் பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணி வீரர் ஷுப்மன் கில் கடந்த 2023ஆம் ஆண்டு தொடர்ந்து இரண்டு மாதங்கள் ஐசிசி மாதாந்திர விருதை வென்றதே சாதனையாக இருந்த நிலையில், அதனைத் தற்போது கமிந்து மெண்டிஸ் சமன்செய்து அசத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியா ஆதிக்கம் செலுத்திவரும் கமிந்து மெண்டிஸ், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

அதேபோல் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப் பட்டியலில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட், அயர்லாந்து ஏமி மகுவேர், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஈஷா ஓசா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. இதில் அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாமி பியூமண்டு செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை