IND vs AUS: முதல் ஒருநாள் போட்டியிலிருந்து மேக்ஸ்வெல், ஸ்டார்க் விலகல்!

Updated: Thu, Sep 21 2023 15:03 IST
Image Source: Google

உலகக் கோப்பை தொடருக்கு முன்பு இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி மொஹாலியில் நடைபெறுகிறது. இந்த ஆடுகளம் பேட்ஸ்மன்களுக்கு சொர்க்கம் என்று அழைக்கப்படக்கூடிய அளவுக்கு ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். 

மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் புலியாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொஹாலியில் மட்டும் எலியாகவே இருந்திருக்கிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் யாரேனும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பு ஃபார்ம்க்கு வர வேண்டும் என நினைத்தார்கள் என்றால் அவர்கள் முதலில் விளையாட வேண்டியது இந்த மொஹாலி ஆடுகளத்தில் தான். அந்த அளவுக்கு பேட்ஸ்மன்களுக்கு சாதகமாகவும் பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாகவும் இந்த மைதானம் இருக்கிறது.

தனிப்பட்ட முறையில் இந்திய அணி இங்கு சிறப்பாக விளையாடினாலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் தடுமாறி இருக்கிறது. இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐந்து முறை மொஹாலில் மோதியிருக்கிறார்கள். இதில் இந்திய அணி ஒருமுறை மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. எஞ்சிய நான்கு முறையும் ஆஸ்திரேலியா அணியே வென்றிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்திய அணி மொஹாலியில் கடைசியாக ஆஸ்திரேலியாவிடம் 1996 ஆம் ஆண்டு தான் ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

அதன்பிறகு 27 ஆண்டுகளாக மொஹாலியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவால் வீழ்த்தியது கிடையாது என்ற சோகமான சாதனை இருக்கிறது. இதனால் இப்போட்டியின் மீதான எதிர்ப்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து நட்சத்திர வீரர்களான கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் விலகியுள்ளனர். 

 

முன்னதாக தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் போது அணியில் இடம்பிடித்திருந்த இருவரும் காயம் காரணமாக அந்த தொடரில் அவர்கள் விளையாடவில்லை. தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ள இருவரும் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து விலகியுள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரது காயம் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடை ஏற்படுயுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை