ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல் கல்லை எட்டவுள்ள மிட்செல் ஸ்டார்க்!

Updated: Tue, Sep 17 2024 10:14 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்தன. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது எதிர்வரும் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக இரு அணி வீரர்கள் தயாராகி வருகின்றனர். மேலும் இத்தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த ஜோஸ் பட்லர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்து ஒருநாள் அணியின் கேப்டனாக நட்சத்திர வீரர் ஹாரி ப்ரூக் நியமிக்கப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 

அதேசமயம் இந்த ஒருநாள் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் கூப்பர் கன்னொலி சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அறிமுக வீரரான மஹ்லி பியர்ட்மேன் அணியின் கூடுதல் வீரர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்றைய அறிவித்துள்ளது. ஏனெனில் ஸேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், ரைலீ மெரிடித், ஸ்பென்ஸர் ஜான்சன் உள்ளிட்டோர் காயமடைந்ததன் காரணமாக இந்த முடிவானது எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த ஒருநாள் தொடரில் மிட்செல் ஸ்டார்க் மேற்கொண்டு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்து பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் வரிசையில் மூன்றாம் இடத்தைப் பிடிப்பார். இந்த பட்டியலில் தற்போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் 239 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்தில் உள்ளார். 

அதேசமயம் இந்த பட்டியலின் முதலிடத்தில் கிளென் மெக்ராத் மற்றும் பிரெட் லீ ஆகியோர் தலா 380 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தை பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்த இடத்தில் மறைந்த ஜாம்பவன் ஷேன் வார்னே 291 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும் மிட்செல் ஸ்டார்க் இதுவரை ஆஸ்திரேலிய அணிக்காக 121 போட்டிகளில் விளையாடி 236 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த பட்டியலின் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்ச் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா, கூப்பர் கன்னொலி.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து ஒருநாள் அணி: ஹாரி புரூக் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜோஷ் ஹல், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷித், பில் சால்ட், ஜேமி ஸ்மித், ரீஸ் டாப்லி, ஜான் டர்னர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை