டெஸ்டிலிருந்து ஓய்வு பெற்ற மொயீன் அலி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆல்ரவுண்டர் மொயின் அலி. இவர் தற்போது நடந்து வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் மொயின் அலி, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் உறுதிசெய்துள்ளது.
இதுகுறித்து மொயீன் அலி கூறுகையில், “எனக்கு இப்போது 34 வயது, என்னால் முடிந்தவரை விளையாட விரும்புகிறேன், நான் எனது கிரிக்கெட்டை அனுபவிக்க விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் ஆச்சரியமாக இருக்கிறது, நீங்கள் ஒரு நல்ல நாளைக் கொண்டிருக்கும்போது அது வேறு எந்த வடிவத்தையும் விட சிறந்தது.
நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் ரசித்தேன். ஆனல் அதேசமயம் நான்ன் அதில் போதுமான அளவு செய்ததாக உனர்கிறேன். அதில் நான் மகிழ்ச்சியும் அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
34 வயதான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை 64 டெஸ்ட்டில் விளையாடி உள்ளார். 2,914 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதம், 14 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 155 ரன் எடுத்துள்ளார். 195 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
வரும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆஷஸ் தொடர் ஆகியவற்றுக்காக நீண்ட நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.