அதிரடி காட்டிய டிராவிஸ் ஹெட்டை சொல்லி எடுத்த மொயின் அலி; வைரல் காணொளி!

Updated: Sat, Jun 17 2023 22:23 IST
Image Source: Google

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய நாளின் முதல் செஷனிலேயே ஆஸ்திரேலிய அணியின் வார்னர், லபுஷாக்னே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்த நிலையில் களம் புகுந்த டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெளிப்படுத்திய பேட்டிங் ஃபார்மை மீண்டும் ரசிகர்களுக்கு காட்டினார். அதிரடியாக விளையாடிய அவர் 60 பந்துகளில் அரைசதம் விளாசி அபாயகரமான வீரராக காணப்பட்டார். களத்தில் இரு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்ததால், உடனடியாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலியை அட்டாக்கில் கொண்டு வந்தார். 

இந் நிலையில் மொயின் அலியை அட்டாக் செய்ய நினைத்து டிராவிஸ் ஹெட் டவுன் தி டிராக் இறங்கி வந்து அடிக்க, அது கிரௌலி கைகளில் கேட்ச்சானது. இதனால் இங்கிலாந்து அணிக்கு சாதகம் ஏற்பட்டது. இதனை கண்ட இந்திய ரசிகர்கள் இந்திய அணியை மீண்டும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இக்காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை