சிபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 8ஆவது லீக் போட்டியில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியை எதிர்த்து டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ஃபால்கன்ஸ் அணியானது இமாத் வசிம், ஃபேபியன் ஆலனின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும், 176 ரன்களைச் செர்த்தது. 

Advertisement

இதில் அதிகபட்சமாக இமாத் வசீம் 46 ரன்களையும், ஃபகர் ஸமான் 38 ரன்களையும், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 37 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் சுனில் நரைன் மற்றும் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். 

Advertisement

அந்த அணியில் ஆண்டிரிஸ் கௌஸ் 39 ரன்களையும், பாரிஸ் 31 ரன்களையும், கேசி கார்டி 34 ரன்களையும் கேப்டன் கீரன் பொல்லார்ட் 30 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க மற்ற வீரர்கள் அனைவரும் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தது. ஃபால்கன்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஃபேபியன் ஆலன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதன்மூலம் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு சிபிஎல் தொடரில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. முன்னதாக அந்த அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் படுதோல்வியைச் சந்தித்தது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபேபியன் ஆலன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றியை நோக்கி நர்ந்த சூழலில், ஃபால்கன்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் தனது அபார பந்துவீச்சின் மூலம் எதிரணியின் அதிரடி பேட்டர் கீரன் பொல்லார்டை க்ளீன் போல்டாக்கியதுடன், நைட் ரைடர்ஸ் அணியின் ரன் வேகத்திற்கும் முட்டுக்கட்டைப் போட்டார். இந்நிலையில் முகமது அமீர் பந்துவீச்சில் கீரன் பொல்லார்ட் க்ளீன் போல்டாகிய காணொளியானது இணையாத்த்தில் வைரலாகி வருகிறது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News