WTC 2023: அனைத்து திட்டங்களும் தங்களிடம் தயாராக உள்ளது - முகமது ஷமி!

Updated: Thu, May 25 2023 13:44 IST
Image Source: Google

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் எந்த வீரர் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது போன்ற கருத்துக்களை முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தங்களுக்கு மத்தியில் விவாதித்து வருவதோடு தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு தேவையான அறிவுரைகளையும் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் எதிர்கொள்வதற்கு இந்திய அணி முழு திட்டத்துடன் தயாராக உள்ளது என்று செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய முகமது ஷமி, “தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ப போட்டிக்கான இறுதிப் போட்டிக்கு முன்னேறியதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், கடந்த முறை சில தவறுகள் செய்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டோம். ஆனால் இந்த முறை நாங்கள் போட்டியை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுடன் உள்ளோம். 

இந்த போட்டியில் இருக்கும் சுவாரசியம் என்னவென்றால் இரண்டு அணிகளுக்குமே இது சொந்த மைதானம் கிடையாது, இதனால் இரண்டு அணிகளும் சம பலத்துடன் உள்ளது. ஒரு அணியாக நாங்கள் முழு முன்னேற்பாடுகளும் நம்பிக்கைகளும் உள்ளோம் நிச்சயம் இந்த முறை கோப்பையை வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார். 

இந்திய அணி: ரோஹித் சர்மா, ஷுப்மன் கில், சட்டேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜின்கியா ரஹானே, இஷான் கிஷன், கேஎஸ் பாரத், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனாத்கட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை