முகமது ஷமி மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர் - முகமது கைஃப்!

Updated: Sat, Sep 23 2023 22:46 IST
Image Source: Google

இந்திய அணி தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி உடன் முடிவடைகிறது. இதற்கடுத்த இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக செப்டம்பர் 30ஆம் தேதி கவுகாத்தி மைதானத்தில் விளையாடுகிறது.

அதன்பின் தனது இரண்டாவது மற்றும் கடைசி பயிற்சி போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக, அக்டோபர் மூன்றாம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மைதானத்தில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்திய அணி உலகக் கோப்பை தொடரில் தனது முதல் போட்டியை அக்டோபர் எட்டாம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட இருக்கிறது. இங்கிருந்து இந்திய அணியின் 2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் பயணம் தொடங்குகிறது.

தற்பொழுது இந்திய அணியை பொறுத்தவரை எடுத்துக் கொண்டால் மற்ற எந்த அணிகளை விடவும் மிக வலிமையான பந்துவீச்சு கூட்டணியை வைத்திருக்கிறது. இந்திய அணியின் இந்த பலம் மற்ற எந்த அணிகளுக்கும் இல்லை என்று கூறலாம். இந்திய அணியில் கட்டாயம் இடம்பெறும் ஐந்து பந்துவீச்சாளர்கள் பும்ரா, சிராஜ், குல்தீப், ஜடேஜா, ஹர்திக் என அனைவருமே உலகத் தரமான பந்துவீச்சாளர்கள். ஐந்து பேருமே விக்கெட் எடுக்கக்கூடிய திறமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். மேலும் உள்நாட்டு சூழலுக்கு தகுந்தபடி இவர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.

இந்த காரணத்தினால் மேலும் ஒரு உலகத்தரமான வேகப்பந்துவீச்சாளரான முகமது சமிக்கு விளையாடும் அணியில் இடம் தர முடியாத நிலைமை இருக்கிறது. அவரைத் தொடர்ந்து போட்டி பயிற்சியில் வைப்பதற்காக இந்திய அணி நிர்வாகம் முடிந்த வரையில் வாய்ப்புகளை கொடுத்து வருகிறது. 

இந்த நிலையில் முகமது ஷமி குறித்து பேசிய முகமது கைஃப் “உலகிலேயே மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமிதான். ஆனால் அவர் உலகக் கோப்பையின் ஹீரோ. அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை