INS vs NZ, 2nd ODI: முகமது ஷமி வேகத்தில் தடுமாறும் நியூசிலாந்து!

Updated: Sat, Jan 21 2023 15:35 IST
Image Source: Google

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் எந்தவித மாற்றமும் இல்லை.

முதல் ஒருநாள் போட்டியில் களம் இறங்கிய அதே இந்திய அணி இந்த போட்டியிலும் களம் கண்டது. முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

முதல் ஓவரின் ஐந்தாவது பந்தில் பின் ஆலன் விக்கெட்டை போல்டு ஆக்கினார் முகமது ஷமி. அத்துடன் இந்திய பவுலர்கள் நிற்கவில்லை. தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். 20 பந்துகளில் வெறும் 2 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஹென்றி நிக்கோல்ஸ், சிராஜ் பந்தில் கில் வசம் பிடிபட்டு ஆட்டம் இழந்தார்.

அதற்கு அடுத்த 7ஆவது ஓவரை முகமது சமி வீசினார். புதிதாக உள்ளே வந்திருந்த டேரில் மிட்ச்சல் அந்த பந்தை மிட்-ஆப் திசையில் அடிக்க முயற்சித்தபோது, பந்து வீசிய கையோடு சமி கேட்சை எடுத்தார். ஒரு நிமிடம் என்ன நடக்கிறது என்றே புரியாமல் திகைத்து நின்ற மிட்ச்சல்,  பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

அந்த நேரத்தில் நியூசிலாந்து அணி 9 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து மிகவும் தடுமாறியது. இந்தியாவின் விக்கெட் வேட்டை அத்துடன் நிற்கவில்லை. அதற்கு அடுத்தும் கான்வெ மற்றும் டாம் லேத்தம் இருவரின் விக்கெட்டுகளையும் கைப்பற்றியது. 11 ஓவர்களில் வெறும் 15 ரன்கள் மட்டுமே அடித்து 5 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன்பின் கடந்த போட்டியில் சதம் விளாசிய மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் கிளென் பிலிப்ஸ் இருவரும் ஜோடி சேர்ந்து விளையாடி ஓரளவு தாக்குப்பிடித்தனர். அதன்பின் 22 ரன்கள் எடுத்திருந்த மைக்கேல் பிரேஸ்வெல் முகமது ஷமியின் அசத்தலான் பவுன்சரின் மூலம் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 

 

இதுவரை முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை