ரஞ்சி கோப்பை 2024-25: முதலிரண்டு போட்டிகளில் இருந்து முகமது ஷமி விலகல்!
இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரானது எதிர்வரும் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
மேற்கொண்டு இவ்விரு அணிகளும் முதல் முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் தற்போதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருவதுடன், இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும், எந்தெந்தெ வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீண்டும் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயமடைந்த முகமது ஷமி அதன்பின் நடைபெற்ற எந்தவொரு சர்வதேச கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்காமல் இருந்தார். அதுமட்டுமின்றி தனது காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த அவர், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடர் மற்றும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகினார். பின்னர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது காயத்தில் இருந்து மீளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த முகமது ஷமி, வங்கதேச டெஸ்ட் தொடரிலேயே கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்து.
ஆனால் சில காரணங்களால் அவரால் இத்தொடரில் இடம்பிடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தான் தற்சமயம் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த முகமது ஷமி மீண்டும் காயத்தை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் முகமது ஷமி இத்தகவலிற்கு மறுப்பு தெரிவித்ததுடன், தான் விரைவில் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்புவேன் என்றும் கூறி இருந்தார். இந்நிலையில் அவர் தனது உடற்தகுதியை நிரூபிக்கும் வகையில் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சீசனில் பெங்கால் அணிக்காக விளையாடுவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இருந்து முகமது ஷமி விலகியுள்ளார். அந்தவகையில் முகமது ஷமி தனது முழு உடற்தகுதியை எட்டாத காரணத்தால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் எதிர்வரும் நியூசிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ள நிலையுல், பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்குள் முழு உடற்தகுதியை ஏட்டுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேசமயம் பெங்கால் அணியைப் பொறுத்தவரையில் ஷமி இல்லாதது பின்னடைவை கொடுத்தாலும் விருத்திமான் சஹா மீண்டும் அணியில் இணைந்துள்ள சாதகமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Funding To Save Test Cricket
பெங்கால் ரஞ்சி அணி: அனுஸ்துப் மஜும்தார் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், சுதீப் கராமி, சுதீப் சட்டர்ஜி, விருத்திமான் சாஹா, ஷாபாஸ் அகமது, அபிஷேக் போரல், ஹிருத்திக் சட்டர்ஜி, அவிலின் கோஷ், ஷுவம் தே, ஆகாஷ் தீப், முகேஷ் குமார், சூரஜ் ஜெய்ஸ்வால், முகமது கைஃப், பிரதீப்தா பிரமானிக், அமீர் கானி, யுதாஜித் குஹா, ரோஹித் குமார் மற்றும் ரிஷவ் விவேக்.