நேற்று ஐபிஎல் தொடரில் நடந்த லீக் போட்டியில் பெங்களூர் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்ட பரபரப்பான போட்டியில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு பாப் 62 மேக்ஸ்வெல் 77 ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 189 ரன்கள் வந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 182 ரன்கள் மட்டுமே ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு எடுக்க முடிந்தது.

Advertisement

இந்த வெற்றியில் பட்லரை முதல் ஓவரில் ஆட்டம் இழக்க செய்த முகமது சிராஜ்க்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் இந்த தொடர் முழுக்கவே அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். இந்த போட்டியில் முக்கியமான பரபரப்பான கட்டத்தில் துருவ் ஜுரல் அடித்த பந்துக்கு அஸ்வின் இரண்டு ரன்கள் ஓடி எடுத்தார். அப்பொழுது நேராக ஃபீல்டிங் நின்ற மகிபால் பந்தை சரியாகப் பிடித்து சிராஜ்க்கு அடிக்காத காரணத்தால் அவர் மீது சிராஜ் கோபப்பட்டு கத்தினார்.

Advertisement

தற்பொழுது இது குறித்து முகமது சிராஜ் மகிபாலிடம் பேசிய பொழுது “நான் ஒரு கோபமான மனிதன். இதற்காக என்னை மன்னிக்கவும். நான் இது குறித்து ஏற்கனவே இவரிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டு விட்டேன். நான் என்னுடைய ஆக்ரோஷத்தை மைதானத்திற்கு வெளியே கொண்டு செல்லவில்லை. போட்டி முடிந்ததும் எல்லாம் முடிந்து விடும்” என்று கூறினார். 

இதற்கு திருப்பி பதில் அளித்த மகிபால் ” பரவாயில்லை சிராஜ் பாய். பெரிய ஆட்டங்களில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்!” என்று தெரிவித்தார்.

 

மேலும் தொடர்ந்து பேசிய முகமது சிராஜ், “நான் எந்த மாதிரியான சவாலையும் ஏற்க தயாராக இருக்கிறேன். புதிய பந்தில் விக்கெட்டை எடுப்பது மற்றும் பந்து கையில் இருந்து செல்வது எல்லாம் மிக நன்றாக இருக்கிறது. எனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நான் சரியாகப் போகிறேன். பந்துவீச்சு தாக்குதலை முன் நின்று வழிநடத்துவது எனக்கு மகிழ்ச்சியான ஒன்று!” என்று கூறியிருக்கிறார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News