இவரை நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!

Updated: Fri, Aug 25 2023 20:48 IST
Image Source: Google

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏனெனில் கடந்த 2011ஆம் ஆண்டிற்கு பிறகு முற்றிலுமாக இம்முறை உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற இருப்பதினால் இந்திய அணி இந்த முறை சாம்பியன் பட்டம் கைப்பற்ற அதிக வாய்ப்புள்ளதாக பலராலும் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் விளையாடலாம் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா முகமது சிராஜ் கட்டாயம் இந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியில் விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “முகமது சிராஜ் ஒரு சிறப்பான பந்துவீச்சாளர். அவருடைய கரியர் சிறியதாக இருந்தாலும் மிகப் பெரிய தாக்கத்தை அவர் தற்போதைய ஏற்படுத்தியுள்ளார். 24 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 43 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதோடு ஓவருக்கு ஐந்து ரன்களுக்கு குறைவாகவும் அவர் வழங்கி வருகிறார்.

இதன் காரணமாக அவருக்கே நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். பும்ரா, முகமது ஷமி ஆகியோரை விட அவர் எக்கனாமியில் மிகவும் சிக்கனமாக பந்து வீசுகிறார். எனவே அவருக்கான முன்னுரிமையை இந்திய அணி வழங்க வேண்டும். அதோடு ஆசிய மைதானங்களில் சிராஜின் பந்துவீச்சு அற்புதமாக எடுபடுகிறது. அதனால் அவரை அணியல் விளையாட வைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

இந்திய அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான முகமது சிராஜ் இதுவரை 24 போட்டியிலே விளையாடி 43 விக்கெட்டுகளை கைப்பற்றுயுள்ளார். அதோடு 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 59 விக்கெட்டுகளையும், 8 டி20 போட்டியில் விளையாடியுள்ள அவர் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை