ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான தொகுப்பு - மோர்னே மோர்க்கல்!

Updated: Tue, Oct 01 2024 09:37 IST
Image Source: Google

கான்பூரில் நடைபெற்று வரும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியானது மொமினுல் ஹக்கின் அபாரமான சதத்தின் மூலமாக முதல் இன்னிங்ஸில் 233 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆல் அவுட்டானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மொமினுல் ஹக் 107 ரன்களைச் சேர்த்திருந்தார். இந்திய அணி தரப்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் ரோஹித் சர்மா 23, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 72, விராட் கோலி 47, கேஎல் ராகுல் 68 ரன்களைச் சேர்க்க, 34.4 ஓவர்களில் 285 ரன்களைக் குவித்ததுடன் இன்னிங்ஸையும் டிக்ளர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹிதி ஹசன், ஷாகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

அதன்பின் 52 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்துள்ள வங்கதேச அணியானது நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சாத்மான் இஸ்லாம் 7 ரன்களுடனும், மொமினுல் ஹக் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 26 ரன்கள் பின் தங்கிய நிலையில் வங்கதேச அணி இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல், “என்னைப் பொறுத்தவரை, ரவீந்திர ஜடேஜா ஒரு முழுமையான தொகுப்பு. ஏனெனில் அவரால் பேட்டிங் செய்ய முடியும், பந்துவீச முடியும், அவர் களத்தில் மேஜிக் செய்யக்கூடிய ஒரு வீரர். நீங்கள் எப்போதும் உங்கள் அணியில் வைத்திருக்க விரும்பும் ஒரு வீரராக அவர் உள்ளார். மேலும் அவர் இதனை இந்தியாவுக்காக பல ஆண்டுகளாக அதைச் செய்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்த சூழலில் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. ஏனெனில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்க உற்சாகமாக இருக்கிறது. இந்த வீரர்களுக்கு சேவை செய்யவும், அறிவை பகிர்ந்து கொள்ளவும், அனுபவத்தை பகிர்ந்து கொள்ளவும் நான் ஆர்வமுடன் உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். முன்னதாக ரவீந்திர ஜடேஜா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை