டூ பிளேஸிஸ் டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் - மோர்னே மோர்கல்!

Updated: Sat, Jul 09 2022 15:24 IST
Morne Morkel Wants Du Plessis To Play T20 World Cup 2022 (Image Source: Google)

தென் ஆப்பிரிக்க அணியின் சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஃபாஃப் டூ பிளெசிஸ். இவர் கடந்த 2020 முதல் தென் ஆப்பிரிக்கா அணியில் டி20 போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே, ஆர்சிபி அணிக்காக அட்டகாசமாக விளையாடிள்ளார்.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோர்கல் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய மோர்கல், “டி20 உலக கோப்பை தென் ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் வாய்ந்த பெரிய வீரர் யாராவது தேவைப்படுகிறார்கள். டு பிளெஸ்சி 37 வயதிலும் நன்றாக விளையாடுகிறார். பீல்டிங்கிலும் நன்றாகவே இருக்கிறார். அவர் ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக அருமையாக விளையாடுவதை பார்க்கிறோம். 

இப்போதைய தென் ஆப்பிரிக்க அணி சம பலத்துடன் இருக்கிறது. ககிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆஸ்திரேலியாவில் அருமையாக பந்து வீசுவார்கள். சுழல் பந்தில் ஷம்ஸி இருக்கிறார். இந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு நான் ஒரு பெரிய ரசிகன். ஃபாப் டு பிளெஸ்சியை வரும் டி20 உலக கோப்பை அணியில் தேர்ந்தெடுக்க வேண்டுமென தேர்வுக்குழுவைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இதுவரை தென் ஆப்பிரிக்க அணிக்காக 50 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 10 அரைசதங்களுடன் 1,137 ரன்களைச் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை