இவர்கள் இருவரும் புறக்கணிக்கப்பட்டதை நம்பமுடியவில்லை - டேனிஷ் கனேரியா

Updated: Fri, Dec 10 2021 21:42 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. வரும் 17ஆம் தேதி தொடங்குவதாக இருந்த இந்த தொடர் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் சற்று தாமதமாக டிசம்பர் 26ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் இது மிகவும் முக்கியமான தொடர். அதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த 8ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில், ரோஹித் சர்மா, ராகுல், மயன்க் அகர்வால் ஆகிய டாப் ஆர்டர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

மேலும் புஜாரா, ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகியோர் மிடில் ஆர்டர் வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். ரிஷப் பந்த் மற்றும் சஹா ஆகிய இருவரும் விக்கெட் கீப்பர்களாகவும், அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களாகவும் பும்ரா, ஷமி, உமேஷ் யாதவ், சிராஜ், இஷாந்த் ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணி குறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, “சுப்மன் கில் புறக்கணிப்பு பெரிய ஆச்சரியம். தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியில் கில் கண்டிப்பாக இடம்பெற்றிருக்க வேண்டும். தென் ஆப்பிரிக்க கண்டிஷனில் ஆஃப் ஸ்பின்னர்கள் சோபித்ததில்லை. எனவே ரிஸ்ட் ஸ்பின்னரான ராகுல் சாஹர் கண்டிப்பாக அணியில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை