டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய எம் எஸ் தோனி!

Updated: Tue, May 20 2025 22:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, உர்வில் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதேசமயம் இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய ஆயூஷ் மாத்ரே 43 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 42 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். 

இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுத்விர் சிங் மற்றும் ஆகாஷ் மத்வால் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளர். 

அதன்படி இப்போட்டியில் எம் எஸ் தோனி ஒரு சிக்ஸர் அடித்ததன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 350ஆவது சிக்ஸரை பூர்த்தி செய்து அசத்தினார். இதன் மூலம் இந்திய அணி தரப்பில் டி20 கிரிக்கெட்டில் 350 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்ஸர்களை அடித்த 4ஆவது வீரர் எனும் பெருமையையும் பெற்றுள்ளார். முன்னதாக ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டியுள்ளனர். 

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்

  • ரோஹித் சர்மா - 542 சிக்ஸர்கள்
  • விராட் கோலி - 434 சிக்ஸர்கள் 
  • சூர்யகுமார் யாதவ் - 368 சிக்ஸர்கள்
  • எம் எஸ் தோனி - 350 சிக்ஸர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஆயுஷ் மத்ரே, டெவோன் கான்வே, உர்வில் பட்டேல், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், ஷிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன்), அன்ஷுல் கம்போஜ், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, கலீல் அகமது

இம்பேக்ட் வீரர்கள்: மதீஷா பத்திரனா, தீபக் ஹூடா, விஜய் சங்கர், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ண கோஷ்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, குவேனா மபாகா, யுத்விர் சிங் சரக், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் மத்வால்

Also Read: LIVE Cricket Score

இம்பேக்ட் வீரர்கள்: லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஷுபம் துபே, குமார் கார்த்திகேயா, அசோக் சர்மா, குணால் சிங் ரத்தோர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை