மகேந்திர சிங் தோனி ஒரு சாதாரன மனிதர் தான் - மோயின் அலி!

Updated: Mon, Apr 17 2023 22:48 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக 2020ஆம் ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்திய வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வரவில்லை. இவர்கள் விளையாடாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை உருவாக்கியது.

அதற்கு அடுத்த ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இருவரது இடத்தையும் ஒருவரே நிரப்பும் வகையில் இங்கிலாந்து ஆப் ஸ்பின் ஆல் ரவுண்டர் மொயின் அலியை வாங்கி வந்தது. 2021ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையையும் சென்றது. பிறகு 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தின் பொழுது இவரைத் தக்கவைத்தும் கொண்டது.

இந்நிலையில், குணாதிசயங்களில் ஒன்று போலவே இருக்கும் இங்கிலாந்து அணிக்காக முதன்முறையாக 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இயான் மோர்கன் மற்றும் இந்திய அணிக்காக மூன்று வகையான ஐசிசி கோப்பைகளை வென்ற மகேந்திர சிங் தோனி இருவரையும் ஒப்பிட்டும், இருவருக்கு இடையேயான வித்தியாசங்களையும் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய மொயின் அலி, “அவர்கள் எவ்வளவு தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கிறார்கள் என்பதில் ஒரே மாதிரியானவர்கள். இருவருக்கும் இடையில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், தோனி அன்றைய நாளில் தன் கேப்டன்சி மூலம் ஆட்டத்தை அணுகக் கூடியவர். ஆனால் மோர்கன் தரவுகள் புள்ளிவிவரங்கள் படி ஆட்டத்தை அணுகக் கூடியவர். ஆனால் மற்ற பழக்கவழக்கங்களை பொறுத்தவரை இருவரும் ஒன்றானவர்கள்.

அவரைப் பற்றி நான் விவரிப்பதற்கு சிறந்த வழி அவர் சாதாரண மனிதர். அவரை பின்தொடர்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் அது குறித்து எல்லாம் அவரிடம் எந்த ஒரு பெரிய மனப்பான்மையும் இருக்காது. அவர் மிகவும் அடக்கமானவர். அவரிடம் நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். நீங்கள் டிவியில் பார்ப்பதைப் போல அமைதியான அணுகக்கூடிய நபர்தான் மகேந்திர சிங் தோனி” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை