ஓசூரில் கிரிக்கெட் மைதானத்தை திறந்துவைத்தார் எம் எஸ் தோனி!

Updated: Mon, Oct 10 2022 21:46 IST
Image Source: Google

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமக்கு சொந்தமான 'எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி'யில் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 

மேலும் அவரது முன்னிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் எம்எஸ் தோனி குளோபல் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணைப்பு பற்றிய அறிவிப்பும் இம்மைதான திறப்பு விழாவில் வெளியானது.

பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சூப்பர் கிங்ஸ் அகாடமி இடையான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்துடன் வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தையும் டிஜிட்டல் முறையை தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் டிஜிட்டல் மைக்ரோசாப்ட் இன் உலகளவியல் பயிற்சி கூட்டாளியாக Tech - Avant - Garde உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிகச்சியில் பேசிய எம் எஸ் தோனி, “நான் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும், அது ஒரு டைம் மிஷின் போல... நான் என் பள்ளியில் கழித்த நேரத்துக்கு நேராகத் திரும்புவேன். நீங்கள் பெறக்கூடிய சிறந்த தருணங்களில் இதுவும் ஒன்று என்று நான் எப்போதும் நம்புகிறேன். படிப்புகள், விளையாட்டுகள்... ஆனால் பள்ளியில் செலவழித்த நேரம் திரும்ப வராது. உங்களுக்கு எப்போதும் இனிமையான நினைவுகள் இருக்கும். நீங்கள் இங்கு நண்பர்களை உருவாக்குகிறீர்கள், அது உங்களுடன் நீண்ட காலம் இருக்கும்

ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால், பள்ளி என்பது உங்கள் குணாதிசயத்தை வளர்க்கும் காலகட்டம். சிறுசிறு குணாதிசயங்களே அவர்களை வலிமையாக்க வேண்டும். நீங்கள் சரியான நேரத்தில் செயல்பட வேண்டும்.

நீங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும். பெரியவர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். தினமும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் ஒரு வலுவான குணத்தைப் பெற்றவுடன், அது உங்களுடன் மிக நீண்ட காலம் தங்கியிருக்கும் மற்றும் அது உண்மையில் உங்களை வரையறுக்கும் காலகட்டமாக பள்ளியை எப்போதும் உணர்ந்தேன்.

இப்போது இருக்கும் நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து உள்கட்டமைப்பையும் பயன்படுத்துங்கள்” என்று மாணவர்களிடம் எம் எஸ் தோனி தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை