'நான் நல்ல கிரிக்கெட்டை விளையாடினால், எனக்கு PR தேவையில்லை' - எம் எஸ் தோனி!
இந்தியா அணியின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமானவர் மகேந்திர சிங் தோனி. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்த தோனி, தற்போதுவரை ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறார். மேற்கொண்டு கடந்த ஆண்டே அவர் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு அன்கேப்ட் வீரராக சிஎஸ்கே அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவித்திருந்தாலும் தற்போதுவரை சமூக வலைதங்களில் இன்று வரை அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் பெரிதளவில் ஆர்வம் காட்டம் இருந்து வருவதன் மூலம் மற்ற வீரர்களைக் காட்டிலும் தனித்துவமாக இருந்து வருகிறார். இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக தோனி குறித்து அவ்வபோது வெளிவரும் தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த மகேந்திர சிங் தோனியிடம், சமூக ஊடகங்களில் இவ்வளவு குறைந்த சுயவிவரத்தை எவ்வாறு பராமரிக்கிறார் என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி, தனது விளையாட்டு நன்றாக இருந்தால், தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “நான் ஒருபோதும் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய ரசிகனாக இருந்தது கிடையாது. எனக்கு வெவ்வேறு மேலாளர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் என்னை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்த அழுத்தம் கொடுத்தனர். நான் 2004ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமான பின்னர் ட்விட்டர் பிரபலமாக தொடங்கியது. அதன்பின் இன்ஸ்டாகிராம் பிரபலமானது. அப்போது என்னுடைய மேலாளர்கள் சமூக வலைதள்த்தில் மக்களிடம் தொடரை ஏற்படுத்து கொள்ளுமாறு கூறினர்.
ஆனால் அதற்கு என்னுடைய பதில், நான் நன்றாக விளையாடினால் தன்னை பொது மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்த தேவையில்லை என்பது தான். அதனால் நான் எனக்கு தேவை என்றால் அதனை பயன்படுத்துவேன். மற்றப்படி யாரை எவ்வளவு பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறித்து எல்லாம் எனக்கு கவலை கிடையாது. ஏனென்றால் நான் கிரிக்கெட்டை கவனித்துக் கொண்டால் மற்ற அனைத்தும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளும்” என்று தெரிவித்தார்.
Also Read: Funding To Save Test Cricket
எம்எஸ் தோனியைப் பற்றி பேசினால், இந்தியா இதுவரை கண்டிராத தலைசிறந்த கேப்டன்களில் அவரும் ஒருவர். டி20 உலகக் கோப்பை (2007), ஒருநாள் உலகக் கோப்பை (2011) மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை (2013) என மூன்று ஐசிசி தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் அதிக முறை கோப்பையை வென்ற கேப்டன் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையையும் தோனி சமன்செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.