ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி 5 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 62 ரன்களையும், ஜேக்கப் பெத்தெல் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 55 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். இறுதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரொமாரியோ ஷெஃபெர்ட் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என 53 ரன்களைக் குவித்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களைச் சேர்த்தது.

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் ஆயூஷ் மாத்ரே 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 94 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 8 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 77 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆர்சிபி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “நான் பேட்டிங் செய்யத் தொடங்கியபோது, ​​பந்து வீச்சு வகைகளும், தேவையான ரன்களும் இருந்ததால், அழுத்தத்தைக் குறைக்க இன்னும் சில ஷாட்களை மாற்றியிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இந்த தோல்விக்கான பழியை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்கள் நல்ல தொடக்கத்தைப் பெற்றனர், இடையில் நாங்கள் அதை பின்னுக்குத் தள்ளினோம், ஆனால் ரொமாரியோ ஷெப்பர்ட் அற்புதமாக இருந்தார்.

Also Read: LIVE Cricket Score

பந்து வீச்சாளர்கள் என்ன பந்து வீசினாலும், அவரால் அதிகபட்ச ரன்களைப் பெற முடிந்தது. நாம் அதிக யார்க்கர்களை வீச பயிற்சி செய்ய வேண்டும். நாம்மால் யார்க்கர்களை வீச முடியவில்லை என்றால், லோ டாஸ்  பந்தை வீசுவது சிறந்த விஷயமாகும். ஏனெனில் அது அடிக்க மிகவும் கடினமான பந்துகளில் ஒன்றாகும். பதிரானா போன்ற ஒருவர், யார்க்கரை வீசமுடியவில்லை என்றாலும் அவரிடம் வேகம் உள்ளது. அவர் பவுன்சரை வீச முடியும் மற்றும் பேட்டரை யூகிக்க வைக்க முடியும்” என்று தெரிவித்துள்ளர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News