நான் எதிர்கொண்டதிலேயே இவர் தான் மிகவும் கடினமான பவுலர்: ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சுரேஷ் ரெய்னா!

Updated: Wed, Jun 28 2023 22:43 IST
MS Dhoni toughest bowler I've faced in nets: Suresh Raina (Image Source: Google)

இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா கடந்த 2005-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 2018 வரை 18 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டும் இன்றி கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய அவர் 205 போட்டிகளிலும் விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வகையான வடிவத்திலும் சதம் அடித்த மிகச்சிறந்த வீரரான சுரேஷ் ரெய்னா பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்தையுமே சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்.

அதிலும் குறிப்பாக தோனியின் தலைமையின் கீழ் அவரது செயல்பாடு உச்சத்தில் இருந்ததை நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா சமீபத்திய பேட்டியில் பேசுகையில், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்? என்ற கேள்விக்கு பதில் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் “போட்டிகளில் எதிர்கொண்ட கடினமான பவுலர்கள் என்றால் அது மலிங்கா மற்றும் முத்தையா முரளிதரன் இருவரும் தான். வலைப்பயிற்சியில் மகேந்திர சிங் தோனி. நான் இந்தப் பதிலைச் சொல்லும் பொழுது நிச்சயம் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். வலைப்பயிற்சியில் அவர் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின், வேகம், மிதவேகம் என பல்வேறு வகைகளில் பந்துவீசுவார்.

மேலும் அவரது பவுலிங் அவுட் ஆகிவிட்டால், அடுத்த ஒன்றரை மாதத்தில் அதை வைத்து கிண்டல் அடித்துக்கொண்டே இருப்பார். அவரது அருகிலேயே செல்ல முடியாது. மேலும் பலமுறை நோபால் வீசுவார். அதை எடுத்துச் சொன்னால் ஒத்துக் கொள்ளவே மாட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீசுவார். அவரது பந்துவீச்சில் நன்றாக ஸ்விங் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை