தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பக்கம் வந்து விட்டது - கேஎல் ராகுல்!

Updated: Sat, Apr 20 2024 11:39 IST
தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பக்கம் வந்து விட்டது - கேஎல் ராகுல்! (Image Source: Google)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது. அதன்படி இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரச்சின் ரவீந்திரா, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் இணைந்த அஜிங்கிய ரஹானே - ரவீந்திர ஜடேஜா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அஜிங்கியா ரஹானே 36 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே, சமீர் ரிஸ்வி ஆகியோரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய மொயீன் அலியும் 30 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 57 ரன்களையும், மகேந்திர சிங் தோனி 3 பவுண்ட்ரி, 2 சிக்ஸர்கள் என 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு தேவையான் ரன்களைச் சேர்த்தனர். இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கேப்டன் கேஎல் ரகுல் - குயின்டன் டி காக் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினர். அதன்பின், டி காக் 54 ரன்களிலும், கேப்டன் கேஎல் ராகுல் 82 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தாலும், நிக்கோலஸ் பூரன் 23 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தினார். மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையடுத்து போட்டி முடிந்து பேசிய கேஎல் ராகுல், “இந்த போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் போட்டியில் வெற்றிபெறும் போது, உங்களது பெரும்பாலான முடிவுகள் சரியாக இருப்பதை உணர்த்தும். நாங்கள் இப்போட்டியில் எங்களது திட்டங்களில் உறுதியாக இருந்தோம். அது நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டியின் தன்மைகேற்ப நான் எனது அணி பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளோன். அவர்களும் அதற்கேற்றது போல் சிறப்பான செயல்பட்டை வெளிப்படுத்தினர்.

இந்தப் போட்டியில் பாதி அளவில் சிஎஸ்கே அணி 160 ரன்கள் எடுத்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், தோனி உள்ளே வந்த உடன் அழுத்தம் எங்கள் பந்துவீச்சாளர்கள் பக்கம் வந்து விட்டது. மேலும், தோனி வந்த போது ரசிகர்கள் ஆர்ப்பரித்ததால் எங்கள் இளம் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்துக்கு உள்ளானார்கள். அதனால், சிஎஸ்கே அணி 15 - 20 ரன்கள் கூடுதலாக எடுத்தது. இதனால் எங்கள் அணியை போல சிஎஸ்கே பந்துவீச்சாளர்களும் எங்களை அழுத்தத்திற்கு உள்ளாக்குவார்கள் என்பது தெரியும்.

அதன் காரணமாகவே நானும் டி காக்கும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்தோம். அது எங்கள் வெற்றிக்கு வழி வகுத்தது. அடுத்து நாங்கள் சென்னையில் ஆட இருக்கிறோம். ஆனால், இங்கேயே ஒரு சிறிய சென்னை மைதானத்தில் தான் விளையாடி வென்றுள்ளோம். என் வீரர்களிடம் இதற்கு பழகிக் கொள்ளுமாறு கூறினேன். நாங்கள் ஒரு இளம் அணி, அத்தகைய கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை