ஐபிஎல் 2022: இணைத்தை தெறிக்கவிடும் தோனியின் நியூ லுக்!

Updated: Sat, Feb 26 2022 20:04 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் வரும் மார்ச் 26ஆம் தேதி தொடங்கி மே 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா காரணமாக போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிரா மற்றும் புனேவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகபோகத்திற்கு இருக்கும். அதுவும் ஒவ்வொரு ஆண்டும் சிஎஸ்கே கேப்டன் தோனி ஒவ்வொரு கெட்டப் மற்றும் ஹேர்ஸ்டைல்களில் காட்சியளித்து குஷி ஏற்படுத்துவார். அந்தவகையில் இந்தாண்டும் புதிய கெட்டப் ஒன்றில் தோனி தரிசனம் கொடுத்துள்ளார்.

அதன்படி அவரின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவர் அதிக தலைமுடியுடன், காக்கிச்சட்டை பேண்ட் அணிந்துக்கொண்டு ஆட்டோ ஓட்டுநர் போன்று காட்சி தருகிறார். அதுவும் சென்னையில் இருக்கும் ஓட்டுநர் போன்று எண்ட்ரி தருகிறார்.

அவர் இந்த கெட்டப்பை ஐபிஎல் தொடரின் விளம்பரத்திற்காக செய்துக்கொண்டுள்ளார். ஒளிபரபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தற்போது இருந்தே ஐபிஎல்-கான விளம்பர பணிகளை தொடங்கியுள்ளது. விரைவில் தோனியின் முழு விளம்பர காணொளியும் வெளியாகும்.

ஐபிஎல் போட்டிகளின் அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் மொத்தமுள்ள 10 அணிகளும் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு, புதிய வடிவத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் குரூப் "பி", சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத், , ஆர்சிபி, குஜராத் டைட்டான்ஸ், பஞ்சாப் அணிகள் இடம்பெற்றுள்ளன. ஏ குரூப்பில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ அணி, கொல்கத்தா, டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை