வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி அறிவிப்பு; முகமது வசீம் கேப்டனாக நியமனம்!
வங்கதேச அணி சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் சமன்செய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து வங்கதேச அணியானது ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி மே 17ஆம் தேதியும், இரண்டாவது போட்டி மே 19ஆம் தேதியும் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இத்தொடருக்கான வங்கதேச அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதில் வங்கதேச டி20 அணியின் புதிய கேப்டனாக அனுபவ வீரர் லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் வங்கதேச அணியை திறம்பட வழிநடத்திய லிட்டன் தான் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியிருந்தார். ஆனால் அதன்பின் மோசமான ஃபார்ம் காரணமாக வங்கதேச அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதுடன் கேப்டனாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான யுஏஇ அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டனாக முகமது வசீம் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக முகமது வசீம் கடந்த 2023ஆம் ஆண்டு கேப்டன் பதவியிலிருந்து விலகி இருந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இந்தா அணியில் அலிஷன் ஷரபு, ஆரயன்ஷ் ஷர்மா, ராகுல் சோப்ரா உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக டி20 அணி: முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டி’சோசா, ஹைதர் அலி, மதியுல்லா கான், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், முஹம்மது ஜுஹைப், ராகுல் சோப்ரா, சாகிர் கான், சஞ்சித் சர்மா மற்றும் சிம்ரன்ஜீத் சிங்.
Also Read: LIVE Cricket Score
வங்கதேச டி20 அணி: லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தாவ்ஹித் ஹ்ரிடோய், ஷமிம் ஹொசைன், ஜக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், மஹேதி ஹசன் (துணை கேப்டன்), தன்வீர் இஸ்லாம், முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், தன்சிம் ஹசன் சாகிப், நஹித் ராணா மற்றும் ஷோரிபுல் இஸ்லாம்.