சையித் முஷ்டாக் அலி கோப்பை: த்ரில் வெற்றியுடன் கோப்பையைக் கைப்பற்றியது மும்பை!

Updated: Sat, Nov 05 2022 20:35 IST
Image Source: Google

இந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது. இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு அஜிங்கியா ரஹானே தலைமையிலான மும்பை அணியும், ரிஷி தவான் தலைமையிலான ஹிமாச்சல பிரதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்து ஹிமாச்சல பிரதேச அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.

அதன்படி களமிறங்கிய ஹிமாச்சல பிரதேச அணியில் அன்குஷ் பைன்ஸ், ஸ்மித் வெர்மா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழக்க, சோப்ரா 19 ரன்களிலும், நிகில் கங்டா 22 ரன்களோடும் நடையைக் கட்டினர்.

பின்னர் களமிறங்கிய நிதின் சர்மா, கேப்டன் ரிஷி தவான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த ஆகாஷ் வஸிஸ்ட் - எக்ந்த் சென் ஆகியோரு ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹிமாச்சல பிரதேச அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அந்த அணியில் அதிகபச்டமாக எக்ந்த் சென் 37 ரன்களையும், ஆகாஷ் வஸிஸ்ட் 25 ரன்களையும் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் மோஹித் அவஸ்தி, தனுஷ் கொடின் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் ரஹானே ஒரு ரன்னிலும், பிரித்வி ஷா 11 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 27 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய சஃப்ராஸ் கான் ஒரு பக்கம் நங்கூரம் போல நிற்க, எதிர்முனையில் களமிறங்கிய ஷிவம் தூபே, அமன் ஹகிம் கான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றையிலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடைட்யைக் கட்டினர். இதனால் கடைசி 2 ஓவர்களில் மும்பை வெற்றிக்கு 23 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

பின் 19ஆவது ஓஒவரை எதிர்கொண்ட சர்ஃப்ராஸ் கான் அந்த ஓவரில் ஒரு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் உள்பட 17 ரன்களைப் பெற்றுக்கொடுத்தார். அதன்பின் கடைசி ஓவரை எதிர்கொண்ட கொடின் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்ஃப்ராஸ் கான் 36 ரன்களைச் சேர்த்து வெற்றிக்கு உதவினார்.

இதன்மூலம் மும்பை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஹிமாச்சல பிரதேச அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக சையித் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை