கரோனா பாதிப்பு காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்ட 14ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இன்று முதல் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இன்று நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 

Advertisement

இந்நிலையில் இந்த தொடர் குறித்தும், இன்றைய போட்டி குறித்தும் பல்வேறு கருத்துகளை பல்வேறு முன்னாள் வீரர்களும், நிபுணர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரும் அளித்து வருகின்றனர்.

Advertisement

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக் குழு உறுப்பினருமான சபா கரிம் மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் போன்ற ஒரு பேட்ஸ்மேன் கிடைத்தது அவர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றே கூறலாம். ஏனெனில் மூன்றாவது அல்லது நான்காவது வரிசையில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவ் களத்தில் நீண்ட நேரம் நின்று தொடர்ச்சியாக ரன்களை குவிப்பவர்.

அதுமட்டுமின்றி தேவைப்படும்போது பவுண்டரிகளை விளாசும் ஆற்றலும் உடையவர். மும்பை அணியின் பேட்டிங் வரிசையில் பலமே சூரியகுமார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் அவர் நிலையாக நின்று ரன்களை குவித்து வருகிறார். அதிலும் குறிப்பாக தற்போது இந்திய அணிக்கு அறிமுகமாகி மீண்டும் திரும்பி வந்துள்ளதால் அவருடைய தன்னம்பிக்கை தற்போது உச்சகட்டத்தில் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News