மும்பை இந்தியன்ஸின் துருப்புச்சீட்டு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் - சுனில் கவாஸ்கர்!
நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் அகமதாபாத்தில் தொடங்கவுள்ளது. மே 28ஆம் தேதியன்று இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை அனைத்து அணிகளும் தங்களது ஹோம் மைதானங்களில் விளையாடலாம் எனக்கூறப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடந்தாண்டு மிகவும் மோசமானதாக அமைந்தது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட செல்லாமல் வெளியேறினர். எனவே இந்த முறை நிச்சயம் கம்பேக் தர வேண்டும் என முணைப்புடன் உள்ளனர். ஆனால் மும்பையின் தூண்களாக பார்க்கப்படும் கீரன் பொல்லார்ட் ஓய்வு பெற்றுவிட்டார். இதே போல வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் காயம் காரணமாக விளையாடமாட்டார்.
இந்நிலையில் இதெல்லாம் பிரச்சினையே இல்லை என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தாண்டு ரோஹித் சர்மா ஒரு ஸ்பெஷல் திட்டத்துடன் களமிறங்குவார் என நம்புகிறேன். அவரின் செயல்பாடுகள் நிச்சயம் கவனம் ஈர்க்கும். ரோஹித்திற்கு உள்ள முக்கிய துருப்புச்சீட்டு ஜோஃப்ரா ஆர்ச்சர் தான். மும்பையின் பலமும் ஆர்ச்சர் என்று கூறலாம்.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே அதிரடியாக விக்கெட்கள் எடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. இடையில் ரன்ரேட்டை குறைப்பதற்கும், டெத் ஓவர்களில் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் சிறப்பாக செயல்படுவார். மும்பை அணியின் முக்கியமான குறை என்று பார்த்தால் சுழற்பந்துவீச்சு தான். ஸ்பின் காம்பினேஷன் சரியாக அமையாதது போன்று உள்ளது” என என தெரிவித்துள்ளார்.
பல முக்கியமான வீரர்களை கழட்டிவிட்ட மும்பை அணி, இந்த முறை பியூஷ் சாவ்லா, விஸ்ணு விநோத், ராகவ் கோயல், நேஹல் வதேரா என ஒருசில் சுழற்பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கியுள்ளனர். இதில் பியூஷ் சாவ்லா மட்டுமே அனுபவ ஸ்பின்னராக இருக்கிறார். மும்பை ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சை போலவே ஸ்பின்னர்களும் தேவை என்பதால் ரோஹித் சர்மா என்ன செய்யப்போகிறார் என்ற கேள்வி உள்ளது.