ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Mon, Sep 27 2021 20:04 IST
Image Source: Google

அமீரகத்தில் நடைபெற்று வரும் 14ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் நாளை இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. 

இதில் நாளை இரவு நடைபெறும் 42ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் -மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அமீரகத்தில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் படுதோல்வியைத் தழுவியுள்ளதால், பிளே ஆஃப் வாய்ப்பை பெற கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. 

அணியின் தொடக்க வீரர்கள் குயிண்டன் டி காக்,  ரோஹித் சர்மாவை தவிற மற்ற வீரர்கள் சரிவர விளையாடாததால் அந்த அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகின்றன. 

இருப்பினும் பந்துவீச்சில் பும்ரா, போல்ட், ராகுல் சஹார் இருப்பது அணிக்கு சற்று நம்பிகையை கூட்டியுள்ளது.

அதேசமயம் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர் வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய முடியும் என்பதால், அந்த அணியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

பேட்டிங் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கெயில், பூரன், மார்க்ரம் ஆகியோரும், பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, ரவி பிஷ்னோய் ஆகியோர் இருப்பதால் அந்த அணி நிச்சயம் வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 27
  • மும்பை வெற்றி - 14
  • பஞ்சாப் வெற்றி - 13

உத்தேச அணி

பஞ்சாப் கிங்ஸ் - கேஎல் ராகுல் (கே), மயங்க் அகர்வால், கிறிஸ் கெயில், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், நாதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங்.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), குயின்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, கீரன் பொல்லார்ட், குர்னால் பாண்டியா, ஆடம் மில்னே, ராகுல் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, ட்ரெண்ட் போல்ட்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - குயின்டன் டி காக், கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ் - மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ்
  • ஆல் -ரவுண்டர்கள் - கீரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா
  • பந்து வீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ராகுல் சாஹர்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை