எங்களது சிறப்பான ஆட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இதனை பார்க்கிறேன் - சரித் அசலங்கா!

Updated: Mon, Oct 21 2024 10:53 IST
Image Source: Google

இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு டையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று பல்லகலேவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானத்ஹு 38.3 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதன் காரணமாக இப்போட்டி தடைபட்டது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரூதர்ஃபோர்டு பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்ததுடன் 74 ரன்களையும், கேசி கார்டி 37 ரன்களையும், ரோஸ்டன் சேஸ் 33 ரன்களையும் சேர்த்தனர். இலங்கை அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன்பின்னரும் மழை நீடித்த காரணத்தால் இலங்கை அணிக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 37 ஓவர்களில் 232 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் அவிஷ்கா ஃபெர்னாண்டோ 5 ரன்னில் பெவிலியன் திரும்ப, அடுத்து களமிறங்கிய குசால் மெண்டிஸ் 13 ரன்னிலும், சதீரா சமரவிக்ரமா 18 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். பின்னர் நிஷான் மதுஷ்காவுடன் இணைந்த கெப்டன் சரித் அசலங்கா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இருவரும் இணைந்து தொடர்ந்து அபாரமாக விளையாடியதுடன் தங்களது அரைசதங்களையும் பதிவுசெய்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். இதில் மதுஷ்கா 69 ரன்னிலும், சரித் அசலங்கா 77 ரன்னிலும் விக்கெட்டை இழக்க, இறுதியில் ஜனித் லியானகே ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும், கமிந்து மெண்டிஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 30 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.

இதன்மூலம் இலங்கை அணி 31.5 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்து அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன் ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்த இலங்கை அணி கேப்டன் சரித் அசலங்கா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சரித் அசலங்கா, “நாங்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியதற்கு கிடைத்த வெற்றியாக நான் இதனை பார்க்கிறேன்.  இப்போட்டியில் நான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய திட்டமாக இருந்தது. அதனால் நான் அதற்கேற்ற மனநிலையுடன் இப்போட்டியில் விளையாடினே. நானும் நிஷானும் நன்றாக பேட் செய்தோம் என்று நினைக்கிறேன். மேலும் 15 ஓவர்களுக்கு மேல் ஈரமான பந்தில் அவர்களால் சரியாக பந்துவீச முடியாமல் போனது எங்களுக்கு சாதகமாக இருந்தது என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை