பிசிபி தேர்தலிலிருந்து விலகிய நஜாம் சேதி; பாகிஸ்தான் கிரிக்க்கெட்டில் புதிய குழப்பம்! 

Updated: Tue, Jun 20 2023 12:40 IST
Image Source: Google

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தற்போது புதிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. பாகிஸ்தானில் அண்மையில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் கடும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்த ரமீஷ் ராஜா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு நஜாம் சேதி இடைக்கால தலைவராக பணியில் அமர்ந்தார். 

நஜீம் சேதி பதவியில் அமர்ந்த பிறகு பிசிசிஐ க்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கும், பிசிசிஐக்கும் மோதல் போக்கு தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் தான் நடத்துவோம் என நஜாம் சேதி விடாப்பிடியாக இருந்தார். இதனால் பல குழப்பங்கள் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியா விளையாடும் போட்டியை மட்டும் வேறு நாட்டில் நடத்திக் கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்தது.

முதலில் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கவில்லை. பிறகு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் வரமாட்டோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியும் கூறியதை எடுத்து இந்தியா இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் நஜாம் சேதி தற்போது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பொறுப்புக்கு அஷிப் சதாரி, செபாஸ் ஷெரிப் ஆகியோர் போட்டி போட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நானும் போட்டி போட விரும்பவில்லை.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிலையற்ற தன்மை நீடிப்பது நல்லது அல்ல. சூழ்நிலைகளை பார்க்கும் போது நான் தலைவர் பதவிக்கு சரியான நபர் கிடையாது என்று கூறி தனது பகுதியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இதனை அடுத்து புதிய தலைவர் நாளை அல்லது நாளை மறுநாள் தேர்தல் மூலம் நியமிக்க படலாம். 

இந்நிலையில் ஐசிசி இடம் கடிதம் ஒன்று அளித்துள்ள நஜாம் சேதி பாகிஸ்தானில் நிலையற்ற அரசு நீடிப்பதாக விமர்சனம் செய்திருந்தார். இதனாலே அவர் பதவியை விட்டு விலக காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை