தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி நமீபியா அசத்தல் வெற்றி!

Updated: Sat, Oct 11 2025 21:22 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி இன்று நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய அந்த அணிக்கு லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் மற்றும் குயிண்டன் டி காக் தொடக்கம் கொடுத்தனர். இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி காக் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய ரீஸா ஹேன்றிக்ஸும் 7 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான லுவன் டிரே பிரிட்டோரியஸும் 22  ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த ருபின் ஹார்மன் - ஜேசன் ஸ்மித் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் ருபின் ஹர்மான் 23 ரன்களுக்கும், ஜேசன் ஸ்மித் 31 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் டோனவன் ஃபெரீரா 4 ரன்களிலும், சிமலெனா 11  ரன்னிலும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிஜோர்ன் 19 ரன்களையும், ஜெரால்ட் கோட்ஸி 12 ரன்களையும் சேர்த்தனர். 

இதன் காரணமாக தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை 138 ரன்களைச் சேர்த்தது. நமிபியா அணி தரப்பில் டிரெம்பல்மேன் 3 விக்கெட்டுகளையும், மேக்ஸ் ஹெய்ங்கா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய நமீபியா அணிக்கு ஜான் ஃபிரைலிங்க் மற்றும் லாரன் ஸ்டீன்கேம்ப் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஃபிரைலிங்க் 7 ரன்னிலும், அடுத்து வந்த ஜான் நிக்கோல் 7 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான லாரானும் 13 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

Also Read: LIVE Cricket Score

பின்னர் களமிறங்கிய கேப்டன் ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் 21 ரன்களுக்கும், ஜேஜே ஸ்மித் 13 ரன்னிலும், மலான் குரூகர் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஜான் க்ரீன் - ரூபின் டிரெம்பல்மேன் இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காம் இருந்த ஸான் க்ரீன் 30 ரன்களையும், ரூபின் டிரெம்பெல்மேன் 11 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் நமீபியா அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை