ZIM vs NZ: நாதன் ஸ்மித் விலகல்; சக்காரி ஃபால்க்ஸுக்கு வாய்ப்பு!

Updated: Sun, Aug 03 2025 22:41 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட்  போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகாஸ்ட் 7ஆம் தேதி புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.  

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணி பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி, அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் ஸ்மித் உலநலக்குறைவு காரணமாக இத்தொடரில் இருந்து விலகியுள்ளார். முன்னதாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் ஸ்மித் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு ஓவர் கூட பந்துவீச வரவில்லை.

இந்நிலையில் தான் அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து டெஸ்ட் அணியில் இளம் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் சக்கரி பால்க்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சக்காரி ஃபால்க்ஸ் இதுவரை நியூசிலாந்து அணிக்காக மொத்தமாக 15 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் 13 டி20 போட்டிகளில் இந்த விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து டெஸ்ட் அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் பிளண்டெல், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், வில் ஓ'ரூர்க், அஜாஸ் படேல், மைக்கேல் பிரேஸ்வெல், ராச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர், சக்காரி ஃபால்க்ஸ், வில் யங்

ஜிம்பாப்வே டெஸ்ட் அணி: கிரேக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், தனகா சிவாங்கா, பென் கரண், ட்ரெவர் குவாண்டு, ராய் கையா, தனுனுர்வா மகோனி, கிளைவ் மடாண்டே, வின்சென்ட் மசெகேசா, வெலிங்டன் மசகட்ஸா, பிளஸ்ஸிங் முசரபானி, நியூமன் நியாம்ஹுரி, சிக்கந்தர் ராசா, தஃபட்ஸ்வா சிகா, நிக்கோலஸ் வெல்ச், சீன் வில்லியம்ஸ்.

Also Read: LIVE Cricket Score

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை