NED vs IRE, 3nd ODI: டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்!
அயர்லாந்து அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி உட்ரெக்ட்டில் உள்ள ஸ்போர்ட் பார்க் மார்ஷல் கர்வீர்ட் மைதானத்தில் இன்று (ஜூன் 7) நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி கேப்டன் பால்பிர்னி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்துள்ளார். இன்றைய போட்டிகான அயர்லாந்து அணியில் வில்லியம் போட்டர்ஃபீல்டிற்கு பதிலாக கெவின் ஓ பிரையன் சேர்க்கப்பட்டுள்ளார்.
அயர்லாந்து (விளையாடும் லெவன்): பால் ஸ்டிர்லிங், கெவின் ஓ பிரையன், ஆண்ட்ரூ பால்பிர்னி (கே), ஹாரி டெக்டர், ஜார்ஜ் டோக்ரெல், லோர்கன் டக்கர், சிமி சிங், ஆண்டி மெக்பிரைன், பாரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், கிரேக் யங்
நெதர்லாந்து (விளையாடும் லெவன்): மேக்ஸ் ஓடவுட், ஸ்டீபன் மைபர்க், மூசா அகமது, பென் கூப்பர், பீட்டர் சீலார் (கே), பாஸ் டி லீட், ஸ்காட் எட்வர்ட்ஸ், லோகன் வான் பீக், டிம்ம் வான் டெர் குக்டன், பிரெட் கிளாசென், விவியன் கிங்மா