முன்கூட்டியே நடைபெறும் ஒருநாள் போட்டி; வரலாற்றில் இதுவே முதல் முறை - காரணம் இதுதான்!

Updated: Thu, May 20 2021 16:16 IST
Image Source: Google

நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்காட்லாந்து அணி இரண்டு ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் நெதர்லாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நேற்றைய போட்டியிலேயே மழை குறுக்கிட்டு ஆட்டம் சரிவர நடைபெறாததால், இரண்டாவது ஒருநாள் போட்டியை முன்கூட்டியே நடத்த நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இதுகுறித்து நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெதர்லாந்து - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி மே 21ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. 

ஆனால் அன்றைய தினம் மழை காரணமாக  வானிலை மோசமாக இருக்கும் என்பதால், இப்போட்டியை மே 20ஆம் தேதியே நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது. 

மழை காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒருநாள் முன்னதாக நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்கிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை