இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்றுல் பல்லகலேவில் நடைபெற்றது. 

Advertisement

மழை காரணமாக 44 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் 36 ஓவரில் 189 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சகாம ரூதர்ஃபோர்டு 80 ரன்களையும், குடகேஷ் மோட்டி 50 ரன்களையும் சேர்த்தனர். 

Advertisement

இலங்கை அணி தரப்பில் அதிகபட்சமாக வநிந்து ஹசரங்கா 4 விக்கெட்டுகளையும், மஹீஷ் தீக்ஷனா, அசிதா ஃபெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். பின்னர் நிஷான் மதுஷ்கா மற்றும் சதீரா சமரவிகரமா ஆகியோரும் தலா 38 ரன்கள் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா இப்போட்டியிலும் அரைசதம் கடந்து அசத்தினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அசலங்கா 62 ரன்களைச் சேர்க்க, இலங்கை அணி 38.2 ஓவர்களில் இலக்கை எட்டிடதுடன் 5 விக்கெட் வித்தியாசத்தில் விண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணியானது 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியும் அசத்தியுள்ளது. இப்போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், அதிகபடியான டாட் பந்துகளை விளையாடியதே தோல்விக்கு காரணம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களில் கவனம் செலுத்த நான் உண்மையில் விரும்பவில்லை. நாம் கட்டுப்படுத்தக்கூடியது நமது செயல்திறன் மற்றும் நமது செயல்முறைகளில் கவனம் செலுத்துவதே முக்கியம். ஆனால் இன்று நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். நாங்கள் நிறைய டாட் பந்துகளை விளையாடியதன் காரணமாகவே எங்களால் ரன்களைச் சேர்க்க முடியவில்லை. மேலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக விளையாடுவதிலும் நாங்கள் மேம்பட் வேண்டும். மேலும் எங்கள் பந்துவீச்சாளர்கள் எதிரணியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News