இவர்கள் இருவரையும் வீழ்த்துவது மிகவும் இயல்பு - முகமது அமீர்
பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியின் போது இந்திய அணி விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. மன ரீதியாக தனக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தமே காரணமாக முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் தீடீரென தனது ஓய்வை அறிவித்தார். 28 வயதே ஆகும் அவர் ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை எப்படி வீழ்த்துவது குறித்து ஓபனாக பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அமீர்,“பந்துவீச எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது ரோகித் சர்மா தான். அவரை 2 வழிகளில் சுலபமாக வீழ்த்த முடியும். இடதுகை பவுலர்கள் வீசும் இன் ஸ்விங்கிற்கு ரோகித் சர்மா மிக திணறுவார். அதே போல வேகமாக போடப்படும் அவுட் ஸ்விங்கிலும் சற்று திணறுவார்.
இதே போல விராட் கோலி குறித்து முகமது அமீர் பேசியுள்ளார். அதில், அதிக அழுத்தம் நிறைந்த சூழலில் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அச்சூழலில் மிகவும் சிறப்பாக செயல்படும் விராட் கோலி குறித்து சொல்லவே தேவையில்லை. அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் அவர் தன்னை நிரூபித்துள்ளார். அதனால் தான் அவர் கிங் கோலியாக உள்ளார். அவருக்கு பந்துவீசுவது எனக்கு சற்று கடினமாக தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை பாகிஸ்தான் அணிக்காக முகமது அமீர் விளையாடிய 36 டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்களும், 61 ஒருநாள் போட்டிகளில் 81 விக்கெட்களும், 50 டி20 போட்டிகளில் 59 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.