வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தி தொடரை வென்று வரலாறு படைத்த நேபாள்!
Nepal vs West Indies, 2nd T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நேபாள் அணியின் ஆசிஃப் ஷேக், சந்தீப் ஜோரா ஆகியோர் அரைசதங்களை கடந்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேபாளத்திற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் நேபாள் அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அந்த அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் குஷால் புர்டல், ரோஹித் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர்.
பின்னர் இணைந்த ஆசிப் ஷேக் மற்றும் சந்தீப் ஜா இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இருவரும் தங்கள் அரைசதங்களையும் கடந்து அசத்தினார். அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த சந்தீப் ஜோரா 3 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 63 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய குல்ஷன் ஜா மற்றும் முகமது ஆதில் 11 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆசிஃப் ஷேக் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 68 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதனால் நேபாள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்களைச் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன், கைல் மேயர்ஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜூவெல் அண்ட்ரூ 2 ரன்னிலும், கைல் மேயர்ஸ் 6 ரன்னிலும், கேசி கார்டி ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த அகீம் அகஸ்டே - அமீர் ஜங்கூ இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர்.
Also Read: LIVE Cricket Score
பின் அகீம் அகஸ்டே 17 ரன்னிலும், அமீர் ஜங்கூ 16 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் 21 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவார்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 83 ரன்களில் ஆட்டமிழந்தார். நேபாள் அணி தரப்பில் முகமது ஆதில் 4 விக்கெட்டுகளையும், குஷால் புர்டல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் நேபாள் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றும் சாதனை படைத்துள்ளது.