நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சேன். இவர் ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியவர். லெக் ஸ்பின்னரான இவர் உலகின் பல்வேறு லீக் தொடர்களில் விளையாடிவருகிறார். 

Advertisement

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அவர் மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 17 வயது சிறுமி ஒருவர் இந்தப் புகாரை நேபாளின் கவுசாலா பெருநகர காவல் துறையிடம் அளித்துள்ளார். அவர் அளித்திருக்கும் புகாரில், “நான் சந்தீப்பின் தீவிர ரசிகை. அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்னாப்சாட் வழியே தொடர்புகொண்டு பேசுவது வழக்கம். என்னை சந்திக்க வேண்டும் என முதன்முதலில் அவரே என்னிடம் ஆவலுடன் கூறினார். அதனையடுத்து அவரை சந்தித்தபோது, என்னை 2 முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்” என கூறியுள்ளார்.

Advertisement

இந்த புகாரை தொடர்ந்து, அப்பெண்ணிற்கு மருத்துவமனை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசராணையும் மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் கடந்த மாதம் நேபாளத்தை விட்டு புறப்பட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார்.சந்தீப் கரபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்று நாடு திரும்பப்படும் போது கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதனையடுத்து நேபாளம் கிரிக்கெட் வாரியம் சந்தீப் லமிச்சனேவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. முழு விசாரணை முடியும் வரை அவரை பணியிடை நீக்கம் செய்தது. மேலும் இன்று காலை 10 மணியளவில் தான் நேபாளம் திரும்பி விடுவேன் என்றும் பாலியல் புகாரில் விசாரணையின் அனைத்து நிலைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க சட்டப் போராட்டம் நடத்துவேன் என்றும் கூறினார்.

அதன்படி, நேபாள அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் லாமிச்சானே இன்று காலை காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கினார். அதன் பின், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவர் உடனடியாக காவல்துறையால் கைது செய்யப்பட்டார். மேலும் சந்தீப் லாமிச்சானே காவல்துறையினர் காவலில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக நேபாள நடிகர் பால் ஷா, சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கிய விவகாரம் வெளிவந்த பின்னரே, சந்தீப் லமிச்சேனின் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த மே மாதம், பிரபல நேபாள பெண் மாடல் ஒருவர், தான் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட அனுபவத்தை டிக்டாக் செயலில் தொடர் வீடியோவாக வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News