ஆஃப்கானிஸ்தான் தொடருக்கான நெதர்லாந்து அணி அறிவிப்பு!

Updated: Wed, Jan 05 2022 22:17 IST
Image Source: Google

நெதர்லாந்து அணி இம்மாத இறுதியில் ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 

அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி ஜனவரி 25ஆம் தேதி வரை தோஹாவில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இத்தொடருக்கான நெதர்லாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பீட்டர் சீலர் தலைமையிலான இந்த அணியில் மேக்ஸ் ஓடவுட், ஸ்காட் எட்வட்ர்ஸ் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். 

நெதர்லாந்து அணி: பீட்டர் சீலர் (கேப்டன்), கொலின் அக்கர்மேன், மேக்ஸ் ஓ'டவுட், ஸ்காட் எட்வர்ட்ஸ், பிராண்டன் குளோவர், பிரெட் கிளாசென், ரியான் க்ளீன், போரிஸ் கோர்லி, கிளேட்டன் ஃபிலாய்ட், சாகிப் சுல்பிகர், அசாத் சுல்பிகர், பாஸ் டி லீட், விவியன் கிங்மா, ஆர்யன் தத்,பிலிப் போயிஸ்வெயின்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை