ஐபிஎல் 2022: அதிரடி வீரர்களை டார்கெட் செய்யும் லக்னோ & அகமதாபாத்!
இந்தியாவில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4ஆவது முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான அடுத்த சீசனில் அகமதாபாத், லக்னோ ஆகிய இடங்களைக் கொண்டு இரு புதிய அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் வீரர்களை தேர்வு செய்ய மெகா ஏலம் நடைபெறவுள்ளது.
இதில் பழைய எட்டு அணிகளும் தலா 4 வீரர்களையும், இரு புதிய அணி தலா 3 வீரர்களையும் தக்கவைக்கலாம் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனால் எந்தெந்த அணிகள் தங்கள் வீரர்களைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இந்திய வீரர்களாக கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர், டேவிட் வார்னர், சூர்யகுமார் யாதவ் ஆகியோரை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது.
ஏனெனில் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால், இவர்கள் நிச்சயம் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளில் விளையாட அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இதில் கேஎல் ரகுல், டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு அணியை வழிநடத்தும் திறன் இருப்பதால் அவர்களுக்கான போட்டியே எதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: டி20 உலகக் கோப்பை 2021
மேலும் தற்போது ஃபார்மின்றி தவித்துவரும் சுரேஷ் ரெய்னா, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும் கடும் போட்டிகள் நிழவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.