அஹ்மதாபாத் விமான விபத்து: கருப்பு பட்டை அணிந்து விளையாடும் கிரிக்கெட் வீரர்கள்!
Players Wear Black Armbands: அஹ்மதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியா, இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்த லண்டன் செல்ல இருந்த ஏர் இந்தியா விமான விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த பயணிகள் மற்றும் விமானம் மோதிய மருத்துவ கல்லூரி விடுதியில் இருந்த மணவர்கள் என 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் பலியானவர்களுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள், பல நாட்டு பிரதமர்கள் உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடி வருகின்றனர். மேற்கொண்டு இன்றைய போட்டி தொடங்கும் முன்னார் வீரர்கள், நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் என் அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தியும் தங்களுடைய் இரங்கலை பதிவுசெய்தனர்.
அதேசமயம் இன்று நடைபெற இருக்கும் இந்தியா மற்றும் இந்தியா ஏ அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டியின் போதும் இந்திய அணி வீரர்கள் ஒரு கணம் மௌன அஞ்சலி செலுத்தியதுடன், அணிக்குள் நடக்கும் ஆட்டத்திற்கு முன்பு கருப்பு கைப்பட்டைகளை அணிந்து விளையாடி வருகின்றனர். இதுகுறித்த புகைப்படங்களை பிசிசிஐ தங்களுடைய அதிகாரப்பூர்வ் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
மேலும் பிசிசிஐ தங்களின் பதிவில், “பெக்கன்ஹாமில் நடந்த இன்ட்ரா-ஸ்குவாட் ஆட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் துணை ஊழியர்கள் கருப்பு கைப்பட்டைகளை அணிந்துள்ளனர். அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் இன்று ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது” என்று பதிவிட்டுள்ளது.