உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: 15 பேர் அடங்கிய நியூசிலாந்து அணி அறிவிப்பு!

Updated: Tue, Jun 15 2021 14:10 IST
Image Source: Google

இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் ஜூன் 18ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான விராட் கோலி தலைமையிலான 24 பேர் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

அதேசமயம் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி, டெஸ்ட் தொடரை 1-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. 

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியின் கேப்டனாக கேன் வில்லியம்சன் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

இருப்பினும் காயம் காரணமாக இங்கிலாந்து அணியுடனான 2ஆவது டெஸ்டில் விளையாடாத மிட்செல் சாண்ட்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் சிறப்பாகப் பந்து வீசிய இந்திய வம்சாவளியைச் சார்ந்த அஜாஸ் படேல் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்து அணி: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டாம் லதம், கான்வே, ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், வில் யங், பிஜே வாட்லிங், டாம் பிளெண்டல், காலின் டி கிராண்ட்ஹோம், கைல் ஜேமிசன், டிம் செளதி, வாக்னர், அஜாஸ் படேல், டிரெண்ட் போல்ட், மேட் ஹென்றி. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை