BAN vs NZ: நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்த வீரர்!
நியூசிலாந்து அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. மேலும் இத்தொடருக்கான டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் அறிவிக்கப்பட்டு, வங்கதேசத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி செப்டம்பர் 1ஆம் தேதி தாக்காவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் ஃபின் ஆலனுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை முடிவில் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மேட் ஹென்றி மீண்டும் நியூசிலாந்து டி20 அணியில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
நியூசிலாந்து அணி: டாம் லேதம் (கேப்டன்), ஃபின் ஆலன், ஹமிஷ் பென்னட், டாம் ப்ளண்டெல், டக் பிரேஸ்வெல், காலின் டி கிராண்ட்ஹோம், ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, ஸ்காட் குகெலீன், கோல் மெக்கோன்சி, ஹென்றி நிக்கோல்ஸ், அஜாஸ் பட்டேல், ராச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், பிளர் டிக்கர் , வில் யங்.