லண்டன் சென்றடைந்த நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 2ஆம் தேதி லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி இம்மாத தொடக்கத்திலேயே இங்கிலாந்து சென்றடைந்து, சௌத்தாம்டனில் 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கான நியூசிலாந்து அணி இன்று லண்டன் வந்தடைந்தது.
முன்னதாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த நியூசிலாந்து அணி இரு குழுக்களாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்றிருந்தது. அதன்படி டாம் லேதம் தலைமையிலான லேதம் லெவன் அணியும், வில்லியம்சன் தலைமையிலான வில்லியம்சன் லெவன் அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.