டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Nov 02 2021 14:18 IST
Image Source: Google

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - நியூசிலாந்து vs ஸ்காட்லாந்து
  • இடம் - துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம் 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கடந்த போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. மேலும் இனி வரும் போட்டிகளில் அந்த அணி வெற்றிபெறும் பட்சத்தில் அரையிறுதிச்சுற்றுக்கும் முன்னேறும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அணியின் பேட்டிங் ஆர்டரில் கப்தில், மிட்செல், கேன் வில்லியம்சன் ஆகியோரும், பந்துவீச்சில் ட்ரெண்ட் போல்ட், இஷ் சோதி ஆகியோரும் சிறப்பான ஃபார்மில் உள்ளதால் நிச்சயம் நியூசிலாந்து அணி இப்போட்டியில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் ஸ்காட்லாந்து அணி நடப்பு சீசனில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வியைத் தழுவியுள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெற முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 1
  • நியூசிலாந்து வெற்றி -1
  • ஸ்காட்லாந்து வெற்றி - 0

உத்தேச அணி 

நியூசிலாந்து - மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கே), ஜேம்ஸ் நீஷம், டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரென்ட் போல்ட்

ஸ்காட்லாந்து - ஜார்ஜ் முன்சி, கைல் கோட்சர் (கே), மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், கலம் மேக்லியோட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், ஜோஷ் டேவி, சஃப்யான் ஷெரீப், பிராட்லி வீல்

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - மேத்யூ கிராஸ், டெவோன் கான்வே
  • பேட்டர்ஸ் - ரிச்சி பெரிங்டன், கேன் வில்லியம்சன், ஜார்ஜ் முன்சி
  • ஆல்-ரவுண்டர்கள் - டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், மைக்கேல் லீஸ்க்
  • பந்துவீச்சாளர்கள் - மார்க் வாட், இஷ் சோதி, டிரென்ட் போல்ட்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை