நியூசிலாந்தின் அடுத்த கேப்டன் யார்? - கேரி ஸ்டெட் பதில்!

Updated: Tue, May 09 2023 19:32 IST
New Zealand will soon announce their new skipper in the absence of Kane Williamson ! (Image Source: Google)

நியூசிலாந்து அணியில் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன். இவர்  நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். 

ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.  இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

டெஸ்டில் டிம் சௌதி கேப்டனாகவும் தற்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் டாம் லேதம் கேப்டனாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் யார் அடுத்து கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “டேரில் மிட்செல் நன்றாக விளையாடி வருகிறார். வில் யங்கும் சராசரி 48 வைத்திருக்கிறார். தொடக்க ஆட்டக்காரராக கான்வே, பின் ஆலன் இருப்பார்கள். வில்லியம்சனுக்கு பதிலாக மிட்செல் ஆடலாம். கேப்டன்சியை பொறுத்தவரை சௌதி, டாம் லாதம் நன்றாகவே செயல்படுகிறார்கள். இருப்பினும் இன்னும் உலகக் கோப்பைக்கு நேரமிருக்கிறது. அதனால் இனிமேல்தான் அது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை