நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது வங்கதேச அணி. முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தது வங்கதேச அணி. 

Advertisement

இதையாடுத்து 2ஆவது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 128.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 521 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதில் கேப்டன் டாம் லேதம் இரட்டைச் சதமும் கான்வே சதமும் அடித்து அசத்தினார்கள். கான்வே 109 ரன்களிலும் டாம் லேதம் 252 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். 

Advertisement

அதன்பிறகு முதல் இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி, 41.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஃபாலோ ஆன் ஆனது. யாசிர் அலி அதிகபட்சமாக 55 ரன்கள் எடுத்தார். டிரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும் டிம் செளதி 3 விக்கெட்டுகளையும் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள். 

இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 395 ரன்கள் முன்னிலை பெற்றது. பின் ஃபாலோ ஆன் ஆன வங்கதேச அணி மீண்டும் பேட்டிங் செய்யவேண்டிய நிலைமை உருவானது. 

அதன்படி இன்றைய 3 ஆம் நாளான இன்றும் நியூசிலாந்து அணி சிறப்பாகப் பந்துவீசி 79.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு வங்கதேச அணியை ஆட்டமிழக்கச் செய்தது. இப்போட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த்திய லிட்டன் தாஸ் 114 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து அசத்தினார். 

நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 4 விக்கெட்டுகளும் வாக்னர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இன்றுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறும் ராஸ் டெய்லர் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார். 

Advertisement

இதன் மூலம் 2ஆவது டெஸ்டை இன்னிங்ஸ் மற்றும் 117 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து அணி 1-1 என டெஸ்ட் தொடரைச் சமன் செய்துள்ளது. 

மேலும் இப்போட்டியில் இரட்டை சதமடித்த டாம் லேதம் ஆட்டநாயகனாகவும், இரு போட்டிகளிலும் சதம் விளாசிய டேவன் கான்வே தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News