ஆஸ்திரேலிய தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணி அறிவிப்பு!

Updated: Tue, Mar 18 2025 23:20 IST
Image Source: Google

நியூசிலாந்து மகளிர் அணி சமீபத்தில் இலங்கை மகளிர்  அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், டி20 தொடரானது 1-1 என்ற கணக்கில் சமன்செய்தது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரானது மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேற்கொண்டு நியூசிலாந்து டி20 தொடரில் பங்கேற்கும் 14 பேர் அடங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

இதில் தஹ்லியா மெக்ராத் தலைமையிலான இந்த அணியில் சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியாமானதாக அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை அலீசா ஹீலி தனது காயத்தில் இருந்து குணமடையாத காரணத்தால் இத்தொடரில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அறிமுக வீராங்கனை நிக்கோல் ஃபால்டம் ஆஸ்திரேலிய டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இத்தொடருக்கான நியூசிலாந்து மகளிர் அணியும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூஸி பேட்ஸ் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீராங்கனைகள் சோஃபி டுவைன், அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹு உள்ளிட்டோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான தொடரின் போது இவர்கள் மூவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

நியூசிலாந்து மகளிர் டி20 அணி: சூஸி பேட்ஸ், ஈடன் கார்சன், சோஃபி டிவைன், மேடி கிரீன், ப்ரூக் ஹாலிடே, பாலி இங்கிலிஸ், பெல்லா ஜேம்ஸ், ஃபிரான் ஜோனாஸ், ஜெஸ் கெர், அமெலி கெர், ரோஸ்மேரி மெய்ர், ஜார்ஜியா பிளிம்மர், லியா தஹுஹு.

ஆஸ்திரேலிய மகளிர் டி20 அணி: தஹ்லியா மெக்ராத் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னர், டார்சி பிரவுன், நிக்கோல் ஃபால்டம், கிம் கார்த், கிரேஸ் ஹாரிஸ், அலனா கிங், ஃபோப் லிட்ச்ஃபீல்ட், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மேகன் ஷட், அனபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல், ஜார்ஜியா வேர்ஹாம்

Also Read: Funding To Save Test Cricket

நியூசிலாந்து - ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை

  • மார்ச் 21: ஈடன் பார்க் மைதானம், ஆக்லாந்து
  • மார்ச் 23: பே ஓவல் மைதானம், டௌரங்கா
  • மார்ச் 26: ஸ்கை மைதானம், வெலிங்டன்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை