இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி வரும் 18ஆம் தேதி இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெறுகிறது. 

Advertisement

இப்போட்டிக்கான 15 பேர் அடங்கிய அணிகளை இந்தியா, நியூசிலாந்து அறிவித்துள்ளது. மேலும் உலகின் முன்னணி டெஸ்ட் அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறனர். 

Advertisement

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது காயமடைந்த நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், பிஜே வாட்லிங் ஆகியோர் உலக டெஸ்ட்  சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பதை நியூசிலந்து கிரிக்கெட் வாரியம் உறுதிசெய்துள்ளது. 

முன்னதாக இவர்கள் இருவரும் இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் இப்போட்டிக்கு பயன்படுத்தப்படும் டியூக் பந்து மற்றும் நியூசிலாந்து அணியின் ஜெர்சி ஆகியவற்றை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்கலில் வைரலாகி வருகிறது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News