டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நிக்கோலஸ் பூரன்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 4ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஐடன் மார்க்ரம் மற்றும் மிட்செல் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக தொடங்கிய ஐடன் மார்க்ரம் 15 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 21 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு அவருடன் இணைந்துள்ள நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்தவகையில் இந்த போட்டியில் நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு அசத்தியதுடன் தனித்துவ சாதனை பட்டியலிலும் இணைந்துள்ளார். அந்தவகையில் நிக்கோலஸ் பூரன் இன்றைய போட்டியில் இரண்டு சிக்சர்களை அடித்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் தனது 600ஆவது சீக்ஸரை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்களை விளாசிய நான்காவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
அதேசமயம் டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான்கள் கிறிஸ் கெயில் 1056 சிக்ஸர்களை விளாசி முதலிடத்திலும், கீரன் பொல்லார்ட் 908 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்திலும், ஆண்ட்ரே ரஸல் 733 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ள நிலையில், நிக்கோலஸ் பூரன் 602* சிக்ஸர்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்
- 1056 - கிறிஸ் கெய்ல்
- 908 - கீரோன் போலார்டு
- 733 - ஆண்ட்ரே ரஸ்ஸல்
- 601 - நிக்கோலஸ் பூரன்*
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்): ஐடன் மார்க்ராம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், பிரின்ஸ் யாதவ், திக்வேஷ் ரதி, ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய்.
இம்பேக்ட் வீரர்கள் - மணிமாறன் சித்தார்த், அப்துல் சமத், ஹிம்மத் சிங், ஆகாஷ் சிங், ராஸ் ஹங்கர்கேகர்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் (பிளேயிங் லெவன்): ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், ஃபாஃப் டு பிளெசிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, அக்சர் படேல்(கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், விப்ராஜ் நிகாம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா, முகேஷ் குமார்.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் வீரர்கள் - கருண் நாயர், அசுதோஷ் சர்மா, டோனோவன் ஃபெரீரா, திரிபுரானா விஜய், தர்ஷன் நல்கண்டே